பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பத்தாவது பாராளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான அங்குரார்ப்பணக் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVI ஆம் பகுதியையும்;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIX ஆம் பகுதியையும்; மற்றும்
• 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVIII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2024.12.06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வாக்குப் பதிவுக் கணக்கிற்கான பிரேரணையின் (உ) பிரிவிற்கேற்ப 2025.01.01 முதல் 2025.02.28 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் “அபிவிருத்தி நிகழ்ச்சி”களுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சதுரங்க அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் குறைபாடுகள்
(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் கஸ்தூரி ஜீவகனின் இடமாற்றம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மட்டக்களப்பு விமான நிலையத்தை விரிவுபடுத்தும் போது காணி வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதிப்பத்திரங்கள் போன்றவற்றை வழங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1825 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 12ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks