E   |   සි   |  

2025 மார்ச் 15ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : கெளரவ மொஹமட் சாலி நழீம் அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது
2 : ஒழுங்குப் பத்திரத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களை நிரலிடுவது தொடர்பாக 2025.03.14 அன்று சபையில் கௌரவ சமிந்த விஜேசிறி எழுப்பிய விடயம் குறித்தான தெளிவுபடுத்தல்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2025 பெப்ரவரி 27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2025 வரைவு மதிப்பீடுகளின் நிரல்களில் முன்மொழியப்பட்ட உத்தேச திருத்தங்களின் பட்டியலின் திருத்தங்கள்.
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்  
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) நந்தன மில்லகல                   
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று

சீன அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள ‘ஸ்மார்ட் போர்டுகள்’  தொடர்பான கூற்றொன்றினை பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 6 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii)    இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(iii)    இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2021)
(iv)    இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(v)    இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(vi)    இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை (2022)


அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 17ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks