பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் சரீப்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கை ஏற்றுமதியாளர்கள் மீது உத்தேச பரஸ்பர கட்டண தாக்கம்
மேற்சொன்ன வினாவிற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று
கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் குறைபாடுகள் பற்றி 2025.03.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சாமர சம்பத் தசனாயக
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது தன்னை சுட்டிக் காட்டியமை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
(ii) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2021) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும்போது பதிவு செய்தல் போன்றவை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1823 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 19ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks