E   |   සි   |  

2025 மார்ச் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பத்தாவது பாராளுமன்றத்திற்காக “இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினை” தாபித்தல்
2 : கௌரவ (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான தீர்ப்பு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன தென்னகோன்
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்   தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் வேறு இருபத்தொன்பது (29) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(ii) சட்டவாக்க நிலையியற் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, சட்டவாக்க நிலையியற் குழுவானது, தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும் குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வேறு பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(iii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  திருத்தத்துடன் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் வேறு இருபது (20) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(iv) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் வேறு பத்து (10) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(v) சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, சபைக் குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் வேறு பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(vi) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினெட்டு (18) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(viii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31)  உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(ix) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட பதினெட்டு (18) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(x) வழிவகைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, வழிவகைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்து மூன்று (23) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(xi) பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 இன்  ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால்  தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, பொது மனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தொன்பது (29) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(xii) உயர் பதவிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 127 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல், 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, உயர் பதவிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பத்தொன்பது (19) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(xiii) பின்வரிசைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 129 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 திசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால், தடைபெறாமல் 2025 மார்ச் 15 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, பின்வரிசைக் குழுவானது, அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு (08) பின்வரிசை உறுப்பினர்களையும் எதிர்க்கட்சியின் எட்டு (08) பின்வரிசை உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 20ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks