E   |   සි   |  

2025 மார்ச் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVIII மற்றும் XXIX ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XX மற்றும் XXI ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XXVI, XXVII, XXVIII மற்றும் XXIX ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மளிதவள அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை.
(ii)    2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7(2) ஆம் பிரிவின் கீழ் நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2025 சனவரி 08 ஆம் திகதிய 2418/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள்.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன                   
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகள், வட்டி, நிறுத்திவைத்தல் வரி

மேற்சொன்ன வினாவிற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்

வாழச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்தல்

மேற்சொன்ன வினாவிற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 16 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையில் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii)    நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iii)    உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(iv)    காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(vi)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(vii)    மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அறிவித்தல்               
(viii)    உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ix)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை  
(x)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை  
(xi)    இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(xii)    இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(xiii)    இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(xiv)    தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2020)
(xv)    தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2021)
(xvi)    உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம்


அதனையடுத்து, 1913 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks