பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) (அத்தியாயமான 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் “அ” ஆம் அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்.
(2025 சனவரி 27 ஆம் திகதிய 2421/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(ii) 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான (235 அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்க பொது மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான தீர்வைக் கட்டண அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 சனவரி 31 ஆம் திகதிய 2421/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தற்போதைய நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.
(v) 2023 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் வருடாந்த அறிக்கை.
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
ஐக்கிய அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கடனை திருப்பிச் செலுத்துதல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரசதுறைக்கான ஆட்சேர்ப்பு மற்றும் இதரவை தொடர்பான கூற்றொன்றினை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
இந்தியா மற்றும் சீனாவுடனான ஒப்பந்தங்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 19 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுத் திட்டம்
(iii) இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை (2023)
(iv) ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை (2023)
(v) இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2022)
(vi) ஆயுர்வேத மருத்துவப் பேரவையின் வருடாந்த அறிக்கை (2023)
(vii) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை (2022)
(viii) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் ஆண்டறிக்கை (2022)
(ix) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)
(x) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை (2023)
(xi) தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை (2019)
(xii) வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் ஆண்டறிக்கை (2021/2022)
(xiii) தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2022)
(xiv) வரையறுக்கப்பட்ட கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை (2015/2016)
(xv) மாந்தை உப்பு லிமிடட்டின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2020/2021)
(xvi) இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் ஆண்டறிக்கை (2022)
(xvii) இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2022)
(xviii) தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை (2023)
(xix) மத்திய கலாசார நிதியத்தின் ஆண்டறிக்கை (2016)
ஒத்திவைப்புப் பிரேரணை
“சூரிய மின் உற்பத்திக்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1904 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks