பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ நலின் ஹேவகே, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத் - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சிவஞானம் சிறீதரன்
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை மகளிர் மருத்துவப் பிரிவு செயல்படாமை
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ எம். ஏ. எம். தாஹிர்
இலங்கையில் திருமணப் பதிவு தொடர்பான சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளில் உள்ள முரண்பாடுகள்
மேற்சொன்ன வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) சுயாதீன ஆணைக்குழுக்களின் செயல்பாட்டு கட்டமைப்பு தொடர்பாக 2025.06.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சமீபத்திய தீர்மானமும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் தொடர்பான கூற்றொன்றினை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் முன்வைத்தார்.
(iii) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக 2025.09.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக 2025 ஒக்டோபர் 8 ஆம் திகதி கௌரவ பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 ஜூலை 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்பு பிரேரணை
“அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள்” பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார ஜயமஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1802 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks