பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “ஒக்தோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டல் நிகழ்வை” முன்னிட்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான அடையாளச்சின்னம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVI ஆம் மற்றும் XVII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் VIII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப் பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2024 ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுகளுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் (அத்தியாயம் 52) மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டண அறவீட்டிற்கான காலப்பகுதி தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் 2025 செப்தெம்பர் 05 ஆம் திகதி பரிந்துரைக்கப்பட்ட விதிகள்
(vii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப்பண்ட அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 ஓகத்து 25 ஆம் திகதிய 2451/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 யூலை 14 ஆம் திகதிய 2445/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 யூலை 14 ஆம் திகதிய 2445/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 யூலை 14 ஆம் திகதிய 2445/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 யூலை 14 ஆம் திகதிய 2445/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 2024 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜனக சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ரிஸ்வி சாலி
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நலின் ஹேவகே - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) கிருஷ்ணன் கலைச்செல்வி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
சுகாதாரத் துறையிலுள்ள தற்போதைய பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ கே. காதர் மஸ்தான்
ஓய்வூதியத் திணைக்கள சேவைகளை மேம்படுத்துதல்
மேற்சொன்ன வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பிற கல்வித் துறை சிக்கல்கள் தொடர்பாக 2025.09.12 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) நெல் மற்றும் அரிசி விலை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2025.09.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.
(iii) இலங்கை சுங்கத்தினால் புனித அல்-குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு அடங்கிய ஒரு தொகுதி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக 2025.08.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன: -
(i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் – திருத்தங்களுடன்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“காலநிலை மாற்றத்திற்கான மன்ற அலுவலகமொன்றை இலங்கையில் நிறுவுதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 22ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks