E   |   සි   |  

2025 பெப்ரவரி 14 மற்றும் 17 ஆம் திகதிகளுக்கான பாராளுமன்ற சபை அலுவல்கள்


2025, பெப்ரவரி 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது விசேட அமர்வு நாளான 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை க்கான பாராளுமன்ற சபை அலுவல்கள் மற்றும் 2025 பெப்ரவரி 17 ஆம் திகதிக்கான திருத்தப்பட்ட பாராளுமன்ற சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2025 பெப்ரவரி 14 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 முதல் சபாநாயகரின் அறிவித்தல்கள்
("உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பான அறிவிப்பு)

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான பிரேரணைகள்
 

2025 பெப்ரவரி 17 திங்கட்கிழமை

மு.ப. 10.30 முதல் வரவு செலவுத் திட்ட உரை
(ஒதுக்கீட்டுச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு)
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி கௌரவ அமைச்சர்

(2025.02.07 ஆம் திகதிய 18 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 29 ஆம் இலக்க விடயம்)

*வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் அமர்வு பி.ப. 2.00 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்
பி.ப. 2.00 - பி.ப. 7.00 உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2025.02.07 ஆம் திகதிய 18 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 30 ஆம் இலக்க விடயம்)
 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks