07

E   |   සි   |  

2024-06-14

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அவதானம்

தேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பதிரன தலைமையில் அண்மையில் (ஜூன் 05) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும், தேயிலைச் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிடுகையில், தற்பொழுது தேயிலைக் கொழுந்து உற்பத்தி கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டினர். அத்துடன், தேயிலைக் கொழுந்து பறிப்பதிலும் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். விசேடமாக உரம் சம்பந்தமான சிக்கல்கள் காரணமாக தேயிலைக் கொழுந்து உற்பத்தி குறைந்ததாகவும், கடந்த வருடத்தில் அது ஓரளவு சாதகமான நிலைமைக்கு வந்துள்ளதாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பிரதிதிகள் சுட்டிக்காட்டினர்.

தேயிலைக் கொழுந்து உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் அதேவேளை, தரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது.

அரச சார்பற்ற நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பிரதிதிகள் குறிப்பிடுகையில், தற்பொழுது தோட்டத் தொழிலார்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுவதனால் அதற்கு ஒப்பீட்டளவில் வினைத்திறனும் அதிகரிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினர். அவ்வாறில்லை எனின் தேயிலைத் தொழிற் துறையில் நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

soc-ns-chair



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks