07

E   |   සි   |  

2024-08-14

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஆறு புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு நியதிச்சட்ட நிறுவனத்தின் தலைவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை

ஆறு புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு  நியதிச்சட்ட நிறுவனத்தின் தலைவரின் நியமனத்துக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.ஏ.பி.பி. சேரம் அவர்களின் பெயரையும், கட்டார் குடியரசுக்கான இலங்கை தூதுவராக திருமதி ஆர்.எஸ்.கே. அஸாட் அவர்களின் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.கே. குணசேகர மற்றும் எகிப்துக்கான இலங்கை தூதுவராக ஏ.எஸ்.கே. செனவிரத்ன ஆகியோரின் பெயர்களும் உயர் பதவிகள் பற்றிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கை தூதுவராக என்.எம். ஷஹீத், பஹ்ரைன் இராஜ்ஜியத்துக்கான இலங்கை தூதுவராக திருமதி வை.கே. குணசேகர மற்றும் நியூஸிலாந்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.பி. வல்பில கமகே ஆகியோரின் பெயர்களும் உயர் பதவிகள் பற்றிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றாடல் அமைச்சின் புதிய செயலாளராக பி.கே.பி. சந்திரகீர்த்தி மற்றும் கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக எஸ். வீரசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி டி.டீ.கே. பேர்னாட் அவர்களின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரை வழங்கியுள்ளது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ ரிஷாட் பதியுதீன், கௌரவ தலதா அத்துகோரல மற்றும் கௌரவ உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks