பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு பாலின சமத்துவத்துடன் கூடிய வரவுசெலவுத்திட்ட செயல்திறன் குறிகாட்டிகள் தொடர்பில் பல்வேறு வளவாளர்களுடன் கலந்துரையாடியது.
இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு அண்மையில் (16) ஒன்லைன் ஊடாக கூடிய போதே பாலின சமத்துவத்துடன் கூடிய வரவுசெலவுத்திட்ட செயல்திறன் குறிகாட்டிகள் தொடர்பில் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வளவாளர்களுடன் கலந்துரையாடியது.
2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படும் போது பாலின சமத்துவத்துடன் கூடிய வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த ஆண்டில் பாலின சமத்துவத்துடன் தொடர்புடைய பிரதான 12 செயல்திறன் குறிகாட்டிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த பிரதான 12 செயல்திறன் குறிகாட்கள் தொடர்பில் கடந்த ஆண்டுகளில் வரவுசெலவுத்திட்டங்கள் தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டங்களில் அது பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டிய விதம் தொடர்பில் உரிய தரப்பினர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
ஒன்லைன் ஊடாக இணைந்துகொண்ட வளவாளர்கள் இந்த செயல்திறன் குறிகாட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்தி கடந்த சில ஆண்டுகளில் வரவுசெலவுத்திட்டம் ஊடாக நிதியொதுக்கீடு செய்யப்பட்ட விதம் மற்றும் அதன் செயற்திறன் தொடர்பிலும் தகவல்களை முன்வைத்தனர். மேலும், எதிர்வரும் வரவுசெலவுத்திட்டங்களில் இந்த செயல்திறன் குறிகாட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்தத்தப்படவேண்டிய துறைகள் பற்றியும் விளக்கமளித்தனர்.
பல துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைந்த அளவில் காணப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த இந்த விசேட குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே குறிப்பிட்டார். கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் பல்கலைக்கழக கல்வியை முடித்திருந்தாலும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவர்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் மற்றும் பிற பொறுப்புகள் வழங்கப்படுவதால், பல்வேறு துறைகளில் பெண்கள் பங்கேற்பது குறைந்த அளவில் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். மேலும் தொழில்முனைவுத் துறையில் பெண்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இதற்காக பயிற்சித் திட்டங்கள் மற்றும் வங்கிக் கடன்கள் தொடர்பில் முன்னேற்றமான நிலையை உருவாக்க வேண்டும் எனவும் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே குறிப்பிட்டார்.
இங்கு முன்வைக்கப்பட்ட தகவல்கள் எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமும் இந்த விசேட குழுவின் செயலாளருமான குஷானி ரோஹனதீர சுட்டிக்காட்டினார். அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு தனது நன்றிகளை கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்த விசேட குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவதுவள, பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, வளவாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமும் இந்த விசேட குழுவின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்ட பாராளுமன்ற பணியாட்களும் ஒன்லைன் ஊடாக கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks