பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் (WPC) என்பது பல்வேறு அரசியல் கட்சிகள், புவியியல் அமைவிடங்கள், இன மற்றும் மத குழுக்களைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே குறிக்கோளின் கீழ் – பெண்களை வலுவூட்டுவதுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை ஒழித்தல் - ஒன்றுசேர்க்கும் ஒரு தனித்துவமான பாராளுமன்றப் பொறிமுறையாகும் என்பதுடன் இலங்கையில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கான சட்டம் மற்றும் கொள்கை சார்ந்த விடயங்களுக்காகப் பரிந்துரைக்கும் அதே நேரம் பாலினம் தொடர்பான மிக உயர்ந்த முடிவெடுக்கும் குழுவாகவும் செயல்படுகிறது.
அரசியலில் பெண்களின் பங்குபற்றுதலை அதிகரிப்பது, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்தைப் பாதுகாப்பது, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான மீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளடங்கலாக பெண் தொழிலாளர்களின் நலனோம்புகை மீது கவனம்செலுத்துதல், சலுகை கிட்டாத பெண்கள் மற்றும் விதவைகள் மத்தியில் வறுமை ஒழிப்பு மற்றும் அவர்களுக்கு வாழ்க்கைத்தொழில் பயிற்சி மற்றும் வசதியளிப்பு ஆகியவற்றைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உபாயமார்க்கங்கள் உள்ளடக்குகின்றன.
பெண்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்துதல், பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்தல், அவர்களுக்குச் சட்ட உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல், பெண்களின் முன்னேற்றத்திற்கான சட்டங்களை இயற்றிப் பொதுவாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களித்தல் ஆகியவையும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உபாயமார்க்கங்களாகும்.
பாராளுமன்றத்தில் பரிந்து பேசுதல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள் மற்றும் மாநாடுகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் வெளிக்கள நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அதன் நடவடிக்கைகளை மேறகொள்கிறது.
கடந்த 14 வருடங்களாக ஒன்றியம் அரசியல் வேறுபாடுகள் எதுவுமின்றி மிகவும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதுடன் நாட்டில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தவும் ஒன்றியத்தினால் இயலுமாகியுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களுடனும் அரசாங்க அமைச்சுக்களுடனும் திணைக்களங்களுடனும் நிறுவனங்களுடனும் ஐக்கிய நாடுகள் முகவராண்மைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச சிவில் சமூக அமைப்புக்களுடனும் தனிப்பட்ட தொழில் வல்லுநர்களுடனும் ஒன்றியம் ஒரு வலையமைப்பையும் உருவாக்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றியத்தின் உறுப்பினர்களாவர். ஆரம்பச் சுகாதாரப் பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக இருக்கும் அதேவேளை திறன் விருத்தி, வாழ்க்கைத் தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல மற்றும் கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன பா.உ. ஆகியோர் ஒன்றியத்தின் பிரதித் தவிசாளர்களாகக் கடைமையாற்றுகின்றனர்.
பொது விசாரணைகளூடாக அல்லது அதனை ஒத்த மன்றங்களூடாகப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் பிரச்சினைகளுக்காக, குறிப்பாக பெண்களின் பிரச்சினைகளுக்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்காகவும் நாம் ஆதரித்து வாதாடியுள்ளோம்.
இரண்டு பொது விசாரணைகளில் நாம் பங்குபற்றியுள்ளோம் – பல்வேறு துறைகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் குரல்களுக்குச் செவிமடுத்தல். வேலைத்தளத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தமது அனுபவங்கள் பற்றி அவர்கள் எம்முடன் வெளிப்படையாக கலந்துரையாடியதுடன் பணியிடத்தில் வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் - சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சம்மேளனம் 190 இனை அங்கீகரிப்பதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காணிப் பிரச்சினைகள் பற்றிய விரிவான ஆய்வுகளை முன்னெடுத்துள்ள பங்கீடுபாட்டாளர்களிடம் இருந்தான விசாரணைகளில் நாம் பங்குபற்றியுள்ளதுடன் காணிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியவற்றினை நாம் நேரடியாகவும் செவிமடுத்தோம். இப்பெண்கள் மற்றும் அவர்களது ஏழைக் குடும்பங்களுக்கான தீர்வுகளுக்காக ஆதரித்துவாதாடும் முழுமையான சான்றுகள் கிடைத்தவுடன் இப்பிரச்சினையை நாம் பொருத்தமான ஆலோசனைக் குழுக்களுக்கு ஆற்றுப்படுத்துவோம்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks