பார்க்க

E   |   සි   |  


திரு. ஆர். செயின்ட் எல். பி. தெரணியகல

திரு. ஆர். செயின்ட் எல். பி. தெரணியகல

சேர் போல் எட்வர்ட் பீரிஸ் மற்றும் சீமாட்டி ஹில்டா ஒபேசேகர பீரிஸ் ஆகியோருக்குப் புதல்வராக திரு. ரால்ப் செயின்ட் லுயிஸ் பீரிஸ் தெரணியகல (சி.பீ.ஈ.) பிறந்தார். திரு. தெரணியகல, மேலதிகக் கல்விக்காக இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கற்றார். கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் கற்று அங்கு முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்து மற்றும் வேல்ஷின் தொழில்சார் சட்டத்தரணிகள் சங்கமான இன்னர் டெம்பல் (Inner Temple) உறுப்பினராகிச் சட்டத்தரணியான போது இவரின் வயது 22 ஆகும். இவர் பிரதிநிதிகள் சபையின் முதலாவது செயலாளர் பதவியை வகிப்பதற்கு முன்னர் தனது தொழிலைச் சிறப்பாக மேற்கொண்டு, முடிக்குரிய சட்டத்தரணியானார். 1947 ஜூலை மாதத்தில் திரு. தெரணியகல அரசுப் பேரவையின் செயலாளரானார். அரசுப் போரவை, பிரதிநிதிகள் சபையாக மாற்றமடைந்த போதும் கூட ,1964 ஒக்டோபர் மாதத்தில் ஓய்வு பெறும் வரையில் அவர் இத்தொழிலில் நிலைத்திருந்தார். இப்பயணத்திலே, பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதியுன்னத சான்றான்மை விருதிற்கான உறுப்பினர் (MBE), பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதியுன்னத சான்றான்மை விருதிற்கான அதிகாரி (OBE) மற்றும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதியுன்னத சான்றான்மை விருதிற்கான தளபதி (CBE) போன்ற பெரும் சிறப்புக்களைப் பெற்றுக்கொண்டார். திரு.தெரணியகல பதினேழு வருடங்கள் பாராளுமன்றத்தில் பணியாற்றினார். இவரே பிரதிநிதிகள் சபையின் முதற் செயலாளர் என்பதுடன் பின்னர் பிரதான நிறைவேற்று அதிகாரியாகி, 17 வருடங்களுக்கும் மேல் அப்பதவியை வகித்து வந்தார். எப்போதும் கடின உழைப்புடனும் ஒழுக்கத்துடனும் சேவையாற்றிய அவர், தான் ஆற்றிய பணிகளில் மிகுந்த கவனத்தை செலுத்தி, பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். பெரும் நன்மதிப்புக்குரியவராக விளங்கி, பொதுநலவாயத்தின் மிக மூத்த செயலாளர் எனும் பதவியை வகித்த திரு. தெரணியகலவுக்கு, குறிப்பாக அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட போது கடினமான காலப்பகுதிக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அரசுப் பேரவை பாராளுமன்றமாக மாறிய போதும் சுதேச மொழியைச் சபையின் மொழியாகப் பயன்படுத்தத் தொடங்கிய போதும் திரு. தெரணியகல உதவி வழங்கினார். இவ்வாறான அனைத்துச் சவால்களுக்கு மத்தியிலும் கூட திரு. ஆர்.செயின்ட் எல்.பி. தெரணியகல தனது பணியைச் செயலூக்கத்துடன் முன்னெடுத்து, நாட்டில் சகலரதும் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார். இலங்கைப் பாராளுமன்றத்தில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை என்பதுடன் இவரின் நினைவுகள் மக்களுக்கு இன்றும் மனதைவிட்டும் நீங்காதவையாக இருக்கின்றன.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks