07

E   |   සි   |  

2024-04-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

04 புதிய தூதுவர்கள், 02 அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் 02 நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

நான்கு புதிய தூதுவர்கள், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, வியட்நாம் சோசலிசக் குடியரசின் புதிய இலங்கைத் தூதுவராக டபிள்யூ.ஏ.யு.பி. பெரேராவை நியமிப்பதற்கும், போலந்துக்கான இலங்கையின் புதிய தூதுவராக திருமதி டி.பி. தர்மசேனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், தாய்லாந்துக்கான புதிய இலங்கை தூதுவராக திருமதி ஈ.ஏ.எஸ்.டபிள்யூ. எதிரிசிங்க மற்றும்   மியான்மார் மக்கள் குடியரசின் புதிய இலங்கைத் தூதுவராக திருமதி பி.ஏ.பி. பொன்னம்பெருமவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக (பொறியியலாளர்) ஆர்.ஜி. ரூபசிங்கவின் நியமனத்துக்கும், கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக செல்வி கே.என்.கே. சோமரத்னவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி அளித்துள்ளது.

மேலும், இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே. டி அல்விஸ் மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக கலாநிதி சாரங்க அழகப்பெரும ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ ரிஷாட் பதியுதீன், கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல, கௌரவ உதய கம்மன்பில மற்றும் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks