பார்க்க

E   |   සි   |  

நிருவாகத் திணைக்களம்

இந்தப் போக்குவரத்து அலுவலகம் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் செயல்நோக்கின் கீழ் வருகின்ற முழு வாகனங்களினதும் இயக்கப் பராமரிப்பு தொடர்பான கடமைகளையும் தொழிற்பாடுகளையும் கவனிக்கின்றது. இதில் கெளரவ சபாநாயகர், கெளரவப் பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாகனங்களினதும், பாராளுமன்றச் செயலகத்தினால் பாவிக்கப்படுகின்ற பேரூந்துகள் மற்றும் கார்களின் முதலியவற்றினதும் இயக்கப் பராமரிப்புப் பணிகள் அடங்குகின்றன.

பாராளுமன்றப் பணியாட்டொகுதியின் நிமித்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேரூந்துகளின் இயக்கப் பராமரிப்பு விடயமே இந்தப் போக்குவரத்து அலுவலகத்தின் பிரதான தொழிற்பாடாகும். இது தவிர, பாராளுமன்றத்திலுள்ள பல வகையான போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வினைத்திறன் வாய்ந்ததும் பயனுள்ளதுமான சேவைகளை உத்தரவாதப்படுத்தும் அதே வேளையில் வாகனங்களின் வினைத்திறன் வாய்ந்த பயனுள்ள இயக்கப் பராமரிப்பு விடயங்களுக்கும் இந்த போக்குவரத்து அலுவலகம் பொறுப்புடையதாக விளங்குகின்றது.

போக்குவரத்து அலுவலகத்தினால் கையாளப்படுகின்ற தொழிற்பாடுகள் பின்வருமாறு:

  • வாகனங்களின் கொள்வனவு தொடர்பான விடயங்களை ஒருங்கிணைத்தல்
  • வாகனங்களை ஒதுக்குதல்
  • வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு விடயங்கள்
  • பணியாட்டொகுதிப் போக்குவரத்து வசதி
  • வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்கள், காப்புறுதிகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் ஏனைய ஆவணமாக்கல் பணிகளைக் கையாளுதல்
  • வாகனங்களை வாடகைக்கு விடுதல்
  • வாகன ஓட்டங்கள் பற்றிய பதிவுகளைப் பேணிப் பாதுகாத்தல்
  • வாகனப் பழுதுபார்ப்பு வேலைப் பட்டறையை இயக்குதல்
  • பாராளுமன்றத்திலுள்ள போக்குவரத்து சம்பந்தமான ஏனைய கடமைகளை / தொழிற்பாடுகளைக் கவனித்தல்

 



போக்குவரத்து அலுவலகம்

தொலைபேசி

0372054437

மின்னஞ்சல்

senaka_k@parliament.lk





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks