பார்க்க

E   |   සි   |  

நிருவாகத் திணைக்களம்

பணியாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதை தகுந்தவாறு ஊக்குவிக்கக்கூடிய விதத்தில் பொருத்தமான ஆட்கள் பொருத்தமான பதவிகளை வகிக்க வேண்டும் என்பதற்காக வினைத்திறன் மிக்கதும் பயனுறுதியானதுமான பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியை உருவாக்கும் நோக்குடன் ஆட்சேர்ப்பு, நேர்முகப் பரீட்சை, தெரிவு, பணியிலமர்த்தல், ஊக்குவிப்பு போன்றவை தொடர்பான மனித வளச் செயற்பாடுகளின் மேற்பார்வைக் கட்டமைப்பராகத் திகழும் நிமித்தம் நற்பெயரைக் கட்டியெழுப்புவதற்கு உதவுதல் போன்ற பொறுப்புக்கள் இதில் உள்ளடங்கும்.

தாபன அலுவலகத்தினால் கையாளப்படுகின்ற தொழிற்பாடுகள் பின்வருமாறு

  • ஆட்சேர்ப்பு நடைமுறையினூடாக ஆட்களைச் சேர்த்துக்கொள்ளுதல் (வெற்றிடங்களை பற்றி விளம்பரப்படுத்துதல், விண்ணப்பங்களை ஒழுங்குபடுத்துதல், எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் என்பவற்றை நடாத்துதல்)
  • பாராளுமன்றத்தில் பதவிகளை உருவாக்குதல் மற்றும் ஆளணியைப் பேணுதல் (சேனாதிபதி இல்லம் மற்றும் சபாநாயகரின் வாசஸ்தலம் அடங்கலாக)
  • பணியாட்டொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் செயலகக் கடமைகளை நிறைவேற்றுதல் (கூட்டத்தைக் கூட்டுதல், சேவைகளை வழங்குதல், கூட்ட அறிக்கைகளையும் கோவைகளின் பதிவுகளையும் பேணுதல்)
  • பாராளுமன்றப் பணியாட்டொகுதியின் பிரத்தியேக கோவைகளையும் ஏனைய ஏற்புடைய ஆவணங்களையும் பேணுதல் (நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் ஓய்வுபெறுதல்கள்)
  • பணியாட்டொகுதிக்கான வருடாந்தச் சம்பள ஏற்றங்களை வழங்குதல் மற்றும் ஏனைய மனித வள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • ஜயவடனகம வீடமைப்புத் திட்டத்தில் பணியாட்டொகுதியினருக்கான விடுதிகளைப் பராமரித்தலும் அந்த விடுதிகளை ஒதுக்குதலும்
  • பணியாட்டொகுதியில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியங்களைக் கணித்தல்
  • அக்ரஹாரக் காப்புறுதித் திட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தமான விடயங்களை நடைமுறைப்படுத்துதல்
  • பணியாட்டொகுதியினருக்கான பேரூந்து அனுமதிப்பத்திரங்களை வழங்குதலும் அது தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளுதலும்
  • பணியாட்டொகுதி உறுப்பினர்களினதும் ஆட்சேர்ப்புக்காகத் தெரிவு செய்யப்பட்ட நபர்களினதும் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளுதல்
  • சகல பணியாளர்களினதும் வரவு மற்று லீவு ஆகியன சார்ந்த பதிவுகளைப் பேணுதல்
  • பணியாட்டொகுதியினருக்கிடையில் ஒழுக்கத்தைப் பேணச்செய்தல் மற்றும் ஒழுக்கத்தை மீறுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடர்தல் (குற்றப்பத்திரங்களைத் தயாரித்தல், பணி இடைநிறுத்தம் செய்தல், வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ளுதல், ஆரம்ப கட்ட விசாரணைகளையும் மற்றும் முறைசார் விசாரணைகளையும் நடத்துதல், ஒழு்காற்றுக் கட்டளைகள் மற்றும் அதனுடன் சம்பந்தமான ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்துதல்)
  • சம்பளக் கடன் திட்டங்களைச் செயற்படுத்துதல் (இடர் / ஆதனம் / வாகனம்)
  • கீழ்வருவன போன்ற பாராளுமன்ற நிர்வாகத்துடன் சம்பந்தமான ஏனைய அனைத்து நடவடிக்கைகளும்
    • தொலைபேசி (உள்ளக) விபரக்கொத்தை இற்றைப்படுத்துதல்
    • பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகியன சம்பந்தமான கடிதத் தொடர்புகள்
    • தபால் விடயங்களைக் கையாளுதல்
    • புகையிரத ஆணைச்சீட்டுக்களை வழங்குதல்
    • பணியாட்டொகுதியினருக்கான பயிற்சி (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) வாய்ப்புக்களை வழங்குதல்
  • பதிவேடுகள் பொறுப்பாளரினது பணிகளை மேற்பார்வை செய்தலும் ஆவணக் காப்பகத்தை முகாமை செய்தலும்
  • ஆவணப்படுத்தல் பிரிவை முகாமை செய்தலும் மேற்பார்வை செய்தலும்
  • வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் சம்பந்தமான விடயங்களைக் கையாளுதல். விண்ணப்பங்களை அழைத்தல், திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், பெயர் நியமனத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தினூடாக (ERD) உரிய நிறுவனங்களுக்கான விண்ணப்பங்களை ஒழுங்குபடுத்துதல், கொடுப்பனவுகள், நன்கொடை வழங்கும் முகவராண்மைகளிடமிருந்து நிதிகளைப் பெற்றுக் கொள்ளுதல் ஆகியன தொடர்பில் அனுமதியைக் கோருதல், அதே நேரம் அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

 



தாபன அலுவலகம்

மின்னஞ்சல்

lakshman_j@parliament.lk





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks