பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
திரு. நிஹால் செனவிரத்ன 1934 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி எல்பிட்டியவில் பிறந்தார். 1940 ஆம் ஆண்டு தொடக்கம் 1944 ஆம் ஆண்டு வரை றோயல் கனிஷ்ட பாடசாலையில் தனது கல்வியை ஆரம்பித்த திரு. நிஹால் செனவிரத்ன, அதன் பின்னர் 1945 ஆம் ஆண்டு தொடக்கம் 1954 ஆம் ஆண்டு வரை கொழும்பு றோயல் கல்லூரியில் தனது இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றுக்கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்த திரு. நிஹால் செனவிரத்ன, அப்பல்கலைக்கழகத்தில் இருந்து 1959 ஆம் ஆண்டு சட்ட இளமாணிப் பட்டத்தைப் (எல்எல்பி) பெற்றார். சட்டத் துறையில் தொழிலை முன்னெடுக்கும் ஆர்வத்துடன், 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1961 ஆம் ஆண்டு வரை சட்டக் கல்லூரியில் இணைந்து, அக்கல்லூரியில் இறுதியாண்டு சட்டக்கல்வியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து, 1961 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இணைந்துகொண்டார்.
பாராளுமன்றத்தில் இரண்டாவது உதவிச் செயலாளராக இணைந்துகொண்டதன் மூலம் திரு. நிஹால் செனவிரத்ன அவர்களின் பாராளுமன்றத் தொழில் வாழ்வு 1961 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமானது. 1981ஆம் ஆண்டில் செயலாளர் நாயகம் என்னும் கௌரவமிக்க பதவியை இறுதியாக ஏற்றுக்கொள்ளுவதற்கு முன்பு, 1965 ஆம் ஆண்டு இரண்டாவது உதவிச் செயலாளராகப் பணியாற்றி, பல ஆண்டுகளாகப் பல பதவிநிலைகளின் மூலம் திரு.செனவிரத்ன வலுவுடன் உயர்ந்து வந்தார். திரு. நிஹால் செனவிரத்ன அவர்கள் தனது வாழ்நாளின் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலத்தினைப் பாராளுமன்றச் சேவைக்காக அர்ப்பணித்து 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் செயலாளர் நாயகமாகப் பதவியாற்றிய நிலையில் ஓய்வுபெற்றார்.
திரு. நிஹால் செனவிரத்ன, தனது பதவிக் காலத்தின்போது வெஸ்ட்மினிஸ்டர் பொதுமக்கள் சபை, கனடாவின் ஒட்டாவா பொதுமக்கள் சபை மற்றும் வாஷிங்டன் பிரதிநிதிகள் சபை அகியவற்றில் தலா மூன்று மாதகால பயிற்சிகளை பெற்று, அளப்பரிய சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொண்டார்.
திரு. நிஹால் செனவிரத்ன, ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு ஆலோசனை வகிபாகங்களில் தனது நிபுணத்துவத்தை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து வழங்கினார். அப்போதைய பிரதமரான ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 1998 ஆம் ஆண்டு வரை ஆலோசகராகப் பணியாற்றி, இரண்டு வருடங்களாகத் தனது அறிவையும் வழிகாட்டுதலையும் திரு. நிஹால் செனவிரத்ன வழங்கினார். அதைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரை, மேலும் இரு வருடங்கள் பாராளுமன்ற சபாநாயகரான கௌரவ அனுர டயஸ் பண்டாரநாயக்க அவர்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார்.
திரு. நிஹால் செனவிரத்ன அவர்களின் சிறப்புமிக்க தொழில் வாழ்வும் அரசாங்க சேவைக்கான அவரின் அர்ப்பணிப்பும் இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் நிலைத்து நிற்கும் பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளன. சட்டவாக்கச் செயன்முறையில் அவர் வழங்கிய பங்களிப்புகள், தேசத்திற்குச் சேவையாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பு ஆகியன பொதுச்சேவை மற்றும் தலைமைத்துவம் ஆகிய உன்னத பயணமொன்றிற்கான முன்மாதிரியாக விளக்குகின்றன.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks