பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
திருமதி.பிறியானி விஜேசேகர ஒரு கல்வி கற்ற குடும்பத்தில் வளர்ந்தார். பாடசாலையில் மிகுந்த திறமையை வெளிப்படுத்திய திருமதி.பிறியானி, விசாகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். மிகவும் ஊக்கத்துடனும் தளராமையுடனும் கல்வி கற்ற இவர், சட்டமாணிப் பட்டத்தையும் (LLB) பின்பு சட்ட முதுமாணிப் பட்டத்தையும் (LLM) பெற்றுக்கொண்டார்.
திருமதி.பிறியானி விஜேசேகர கல்வியில் மட்டும் தன் திறமையை வெளிக்காட்டாது, கொழும்பு பல்கலைக்கழக அணிக்காக வலைப்பந்து விளையாடித் தன் திறமையை வெளிக்காட்டி, படிப்பிலும் விளையாட்டிலும் தடம் பதித்தார்.
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் தன் தொழில் வாழ்வினை ஆரம்பித்த திருமதி.பிறியானி விஜேசேகர, அங்கே சட்டங்களைப் பற்றி அதிகமான அறிவினைப் பெற்றுக்கொண்டார். 1985 இல் சட்ட ஆணைக்குழுவில் செயலாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். இது அரசாங்கத்தில் இவரின் முக்கியமான பணிகளின் ஆரம்பமாக அமைந்தது.
1994 - 2002 வரையில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றி, தன் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தனது தலைமைத்துவப் பண்புகளைத் திருமதி. பிறியானி விஜேசேகர வெளிக்காட்டினார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் முதலாவது இலங்கைப் பெண் செயலாளர் நாயகமாக இவர் பதவியேற்றமையே இவரின் மிகப் பெரிய அடைவாக அமைந்தது. இந்தப் பதவியை வகித்த முதல் ஆசியப் பெண் என்ற பெருமையினையும் இவர் தனதாக்கிக் கொண்டார்!
அருஞ்செயல்களை நிறைவேற்றும் பெண்களை அங்கீகரிக்கும் சொண்டா விருதினைத் திருமதி. பிறியானி விஜேசேகர 2006 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டார். சட்டத்திற்கு இவர் வழங்கிய பங்களிப்புக்களுக்காகவும் பெண்களை ஆதரிப்பதற்கான இவரின் முயற்சிகளுக்காகவும் இவர் கௌரவிக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் திருமதி. பிறியானி விஜேசேகர, சீசெல்ஸ் பாராளுமன்றத்திற்கு உதவினார். பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பான விதிகளை ஆக்குவதில் திருமதி. பிறியானி விஜேசேகர திறமைமிக்கவராக இருந்தார்.
2015 ஆம் ஆண்டில் திருமதி. பிறியானி விஜேசேகர, ஒஸ்ரியா குடியரசுக்கான தூதுவராகி வியன்னாவில் ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதியாகவும் கடமையாற்றினார்.
பாராளுமன்ற விடயங்களில் தற்போது இலங்கை சனாதிபதிக்கு உதவி வரும் திருமதி.பிறியானி, நாட்டிற்காகச் சிறந்த தீர்மானங்களை வகுக்க உதவுவதற்காகத் தனது அனைத்து அறிவினையும் அனுவத்தினையும் பயன்படுத்தி வருகின்றார்.
அரசாங்கங்களினதும் பாராளுமன்றங்களினதும் செயற்பாடுகள் தொடர்பில் திருமதி.பிறியானி இரு நூல்களை எழுதியுள்ளார். “அடுத்த ஆயிரம் ஆண்டில் அரசாங்கங்களும் பாராளுமன்றங்களும்” எனும் தலைப்பில் தனது முதல் நூலை 1999 ஆம் ஆண்டு வெளியிட்ட திருமதி.பிறியானி, தனது இரண்டாவது நூலை ‘இலங்கையில் பாராளுமன்ற நடைமுறைகள்’ எனும் தலைப்பில் வெளியிட்டார்.
பலருக்கும் சிறந்த அகத்தூண்டுதலாக இருக்கும் இவர், கடின உழைப்பையும் திடசங்கற்பத்தினையும் கொண்டு எவராலும் பெரும் மாற்றத்தினை நிகழ்த்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். இனிவரும் பல வருடங்களுக்கும் இவரின் பாரம்பரியம் உயிர்ப்புடன் இருக்கும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks