பார்க்க

E   |   සි   |  

 நிலையியற் கட்டளைகளில் வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, சிறப்பு நோக்கங்களிற்கான ஒவ்வொரு குழுவும், அதன் முதலாவது கூட்டத்தில் அலுவல்களைத் தொடங்குவதற்கு முன்னர், தவிசாளராக அதன் உறுப்பினர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

தவிசாளருக்கு முதல் வாக்கொன்றும் அளிக்கப்பட்ட வாக்குகள் சமமாகவிருக்கும் சந்தர்ப்பத்தில் தீர்வு வாக்கொன்றும் இருத்தல் வேண்டும்.

 நிலையியற் கட்டளைகளில் வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, வெற்றிடங்கள் தெரிவுக் குழுவினால் நிரப்பப்படுதல் வேண்டும். ஒரு குழுவில் காணப்படும் அத்தகைய ஒவ்வொரு வெற்றிடமும் நிரப்பப்படும்போது அது பற்றிப் பாராளுமன்றத்தின் அடுத்துவரும் கூட்டத்தில் அறிவிக்கப்படுதல் வேண்டும்.

நிலையியற் கட்டளைகளில் வேறுவகையாகக் குறிப்பிட்டிருந்தாலன்றி கூட்டநடப்பெண்ணானது மூன்று உறுப்பினர்களாதல் வேண்டுமென்பதுடன், தேவையான கூட்டநடப்பெண் இல்லாதபோது கூட்டமொன்றை நடாத்தாமலிருப்பது அத்தகைய குழுவின் தவிசாளரினது கடமையாதலும் வேண்டும்.

குழுவொன்றின் கூட்டங்கள் தவிசாளரினால் கூட்டப்படுதல் வேண்டும்.

தவிசாளர் இல்லாதபோது குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறெவரேனும் உறுப்பினர் தலைமைதாங்குதல் வேண்டும்.

 உரிய குழுவின் முன்னனுமதியைப் பெறாமல் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களிற்கு வருகைதராதுள்ள குழுவின் உறுப்பினர், அத்தகைய குழுவின் உறுப்பாண்மையை இழந்துள்ளாரெனக் கருதப்படுதல் வேண்டும்:

ஆயினும், அவ்வுறுப்பினர் முன்கூட்டியே பெறப்பட்ட பாராளுமன்ற அனுமதியுடன் பாராளுமன்றத்தின் அமர்வுகளிற்குச் சமுகமளிக்காதிருக்கும் காலப்பகுதிக்குள் ஒரு தினத்தில் அத்தகைய குழுவின் ஏதாவது கூட்டம் நடைபெறுமானால் முற்போந்த ஏற்பாடுகள் ஏற்புடையனவாதல் ஆகாது.

குழு பட்டியல்

காண்க

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

அரசாங்க நிதி பற்றிய குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

இணைப்புக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks