பார்க்க

E   |   සි   |  

சட்டவாக்க சேவைகள் திணைக்களம்

பாராளுமன்றத் தொகுதியிலே நூல் நிலையத்தின் அமைவிடம்

நூல் நிலையம் தற்போது பாராளுமன்றத்தின் பிரதான கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் 9800 சதுர அடிகளை முதல் மாடியிலும் 8500 சதுர அடிகளைக் கீழ்த்தளத்திலும் கொண்டு அமைந்துள்ளது. உசாத்துணைப்பிரிவு, இரவல் வழங்கும் பிரிவு, செய்தித்தாள் பிரிவு என்பனவும் நூலக அலுவலர்கள் பணியாற்றும் பகுதியும் நூல் நிலையத்தின் முதலாம் மாடியில் அமைந்துள்ளன. கீழ்த்தளத்தில் ஆய்வுப் பிரிவு, உறுப்பினர்களின் தபால் பிரிவு மற்றும் அண்மையில் நிறுவப்பட்ட கணனிப்பிரிவு ஆகியன அமைந்துள்ளன. ஆய்வுப் பிரிவானது, தரவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் ஏனைய உரிய தகவல்கள் ஆகியவற்றை வழங்குகின்றது. பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை ஆகியவற்றின் அறிக்கைகள், அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்ற நியதிச் சட்ட சபைகளின் வருடாந்த அறிக்கைகள் என்பன கிடைக்கக் கூடியதாயுள்ள கீழ்த்தளமானது உறுப்பினர்களின் ஓய்வு நேர வாசிப்பு மற்றும் ஆய்வுகள் என்பவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான பாரிய இட வசதியையும் கொண்டுள்ளது. கீழ்த்தளத்தில் உள்ள உறுப்பினர் தபால் பிரிவிலிருந்து உறுப்பினர்கள் தமக்கு வரும் கடிதங்களைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நூல் நிலையம் திறந்திருக்கும் நேரங்கள்

நூல் நிலையம் அனைத்து வேலை நாட்களிலும் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை திறந்திருக்கும். சனி, ஞாயிறு தினங்களிலும் பொது விடுமுறை தினங்களிலும் இது மூடியிருக்கும். பாராளுமன்ற அமர்வுத் தினங்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் சபை அமர்வுகள் முடிவடையும் வரை இது திறந்திருக்கும்.

விடயப் பரப்புகள்

நூலகத்தில் உள்ள நூல்கள் பரவலானதும் விரிவானதுமான பலவகை விடயப் பரப்பினை உள்ளடக்கியுள்ளன. அரசியல் விஞ்ஞானம், சர்வதேச விவகாரங்கள், பொருளாதாரம், சட்டம், பொது நிர்வாகம், சமூக நலனோம்புகை, கல்வி, வரலாறு, புவியியல், சமயம் போன்ற துறைகளுக்கு விசேட முக்கியத்துவம் அளிக்கின்ற அதேவேளை பெரும்பாலும் அறிவு சார்ந்த சகல விடயப்பரப்புகளையும் அது உள்ளடக்குகிறது. நூலகத்தின் வாசகர்களது தன்மையை கருத்திற் கொண்டு, உயர் விஞ்ஞானம், தொழிநுட்பம் சார்ந்த நூல்கள் நூலகத் திரட்டிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளன. அரசயில், சட்டம், சர்வதேச தொடர்புகள் ஆகிய துறைகளைச் சார்ந்த ஆக்கங்களைச் சேகரிப்பதன் மூலம் நூலகத் திரட்டைக் கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் விஞ்ஞானத் துறையில் மிகச் சிறந்ததொரு மையமாக இந்நூலகத்தை மேம்படுத்துவதற்கு விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி நூலகத் திரட்டிற்கு மேலதிகமாக, உறுப்பினர்கள் ஓய்வு நேரத்தில் வாசிப்பதற்காக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழி நாவல்களைக் கொண்ட நூலகத் திரட்டு ஒன்றும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்நூல் நிலையத்தில் சுமார் 34,000 நூல்கள் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பகுதி ஆங்கில மொழி நூல்களாகும்

உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதே நூல் நிலையத்தின் பிரதான குறிக்கோளும். அதன் இருப்பிற்கான பிரதான காரணமும் இதுவேயாகும். நூல் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் மாறுபடுகின்றன. உறுப்பினர்களுக்கு, அவர்களுடைய தகவல் தேவைகளுக்கேற்ப வசதியேற்படுத்திக் கொடுக்குமுகமாக நூல் நிலையமானது உசாவல் பிரிவு, இரவல் வழங்கும் பிரிவு, ஆய்வுப் பிரிவு என மூன்று பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நூல் நிலையத்தினைப் பாவிப்பது தொடர்பான முக்கியமான விதிகள்

பாராளுமன்ற நூல் நிலையமானது, பிரத்தியேகமாகப், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கென உள்ளதாகும். சில சந்தர்ப்பங்களில் அவர்களின் தனிப்பட்ட பணியாளர்களை, தங்கள் சார்பிலே, நூல் நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் நியமிக்க முடியும். இதற்கு, பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் முன் அங்கீகாரத்தினை அவர்கள் எழுத்து மூலம் பெற வேண்டும். உண்மையான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்கள், தங்களுக்குரிய தகவல்களைப் பாராளுமன்ற நூல் நிலையத்தினைத் தவிர வேறு எங்கேயும் பெற முடியாது என்கின்ற நிலைமையின்போது அவர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்படுகின்றது. பாராளுமன்றச் செயலகப் பணியாளர்களின் தகவல் தேவைகளும் அவர்களின் வேண்டுகோளின் பேரிலே நூல் நிலையத்தினால் நிறைவேற்றப்படுகின்றன.

நூல் நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் பற்றி இப்பத்திரத்திலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் போதாது எனப் பாராளுமன்ற உறுப்பினர் எவராவது கருதினால், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகத் தயவு செய்து கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி நூல் நிலையத்தின் பணியாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தொலைபேசி: +94 11 2777483, +94 11 2777484



பாராளுமன்ற நூலகம்

மின்னஞ்சல்

sepalika_r@parliament.lk





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks