07

E   |   සි   |  

சட்டவாக்க சேவைகள் திணைக்களம்

இலங்கைப் பாராளுமன்றச் சட்டமூல அலுவலகமானது உதவிப் பணிப்பாளர் (நிருவாகம்) ஒருவரின் தலைமையில் இயங்கி வருகின்றது.

சட்டமூல அலுவலகத்தின் பிரதான பணி, பாராளுமன்றத்தில் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து இறுதிச் சட்டமாக அவை வெளியிடப்படும் வரையான அனைத்து கட்டங்களையும் செயன்முறைப்படுத்தலாகும்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

  1. அரசாங்க சட்டமூலங்கள்
  2. தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள்

சட்டவாக்க செயன்முறையில் பின்வரும் கட்டங்களை ஒவ்வொரு சட்டமூலமும் கடந்துசெல்லவேண்டும் என்பதோடு சட்டமூல அலுவலகமானது ஒவ்வொரு கட்டத்திலும் ஒருங்கிணைத்தல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பான தொடர்புடைய தொழிற்பாடுகளின் செயலாற்றுகைக்கு பொறுப்பாகவுள்ளது.

 

அரசாங்கச் சட்டமூலமொன்று அதன் சட்டவாக்கத்தில் பின்வரும் கட்டங்களைக் கொண்டிருக்கும்.

  1. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (முதலாம் மதிப்பீட்டு)
  2. சட்டமூலத்தை பிரசுரித்தல்
  3. துறைசார் மேற்பார்வை குழுவில் குறிப்பிட்ட சட்டமூலத்தை பரிசீலித்தல்
  4. இரண்டாம் மதிப்பீடு
  5. குழுநிலையில்
    1. முழுப் பாராளுமன்றக் குழு
    2. சட்டவாக்க நிலையியற் குழு
  6. மூன்றாம் மதிப்பீடு
  7. சபாநாயகரின் சான்றுரை
  8. இறுதிச் சட்டத்தை பிரசுரித்தல்

 

தனியார் உறுப்பினர் சட்டமூலமொன்று அதன் சட்டவாக்கத்தில் பின்வரும் பிரதான படிமுறைகளைக் கொண்டிருக்கும்:-

  1. பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்தை நிலையியற் கட்டளையின் நியதிகளின் பிரகாரம், சட்டமா அதிபரின் கருத்துரைக்காக ஆற்றுப்படுத்தல்
  2. சட்டமா அதிபரின் கருத்துக்கள் கிடைத்தவுடன் அதை வர்த்தமானியில் வெளியிடச்செய்தல்
  3. முதலாம் மதிப்பீடு (சட்டமூலத்தை சமர்ப்பித்தல்)
  4. சட்டமூலம் தொடர்பான அமைச்சரின் அறிக்கையை பெறுவதற்காக அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தல்
  5. இரண்டாம் மதிப்பீடு
  6. குழுநிலையில் - சட்டமூலத்தை சட்டவாக்க நிலையியற் குழுவில் பரிசீலித்தல்
  7. மூன்றாம் மதிப்பீடு
  8. சபாநாயகரின் சான்றுரை
  9. இறுதிச் சட்டத்தை பிரசுரித்தல்

 

சட்டமூல அலுவலகத்தின் ஏனைய பணிகள்

  1. சட்ட மூல இடாப்பு மற்றும் சட்ட இடாப்பு என்பவற்றை பேணுதல்
  2. சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பருவகால வெளியீடாக தொகுத்து பிரசுரித்தல்
  3. பாராளுமன்ற இணைத்தள உள்ளக வலைத்தளத்தில் (Intranet– i.parliament) சட்டமூலங்கள் செயல்முறைமையை இற்றைப்படுத்தல்







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks