பார்க்க

E   |   සි   |  

சட்டவாக்க சேவைகள் திணைக்களம்

இலங்கைச் சட்டசபையில் சமகால உரைபெயர்ப்பு முதன்முதலில் 1957ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியினை முதன்முதலில், ஆசியப் பிராந்தியத்தில், தனது சட்டசபையில் அறிமுகப்படுத்திய நாடு இலங்கையாகும். ஆரம்பத்தில், சிங்களம் மற்றும் தமிழ் உரைகளை ஆங்கிலத்திற்கு உரைபெயர்க்கும் வசதி மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் இந்த வசதி விஸ்தரிக்கப்பட்டு, இன்று ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளுக்கு உரைபெயர்ப்பு வழங்கப்படுகின்றது.

தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில், மூன்று துறைகளைச் சேர்ந்த (சிங்களம்/ தமிழ்/ சிங்களம், சிங்களம்/ ஆங்கிலம்/சிங்களம், தமிழ்/ ஆங்கிலம்/ தமிழ்) 24 உரைபெயர்ப்பாளர்கள் உள்ளனர். உரைபெயர்ப்பாளர் பிரிவு பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளரின் தலைமையில் இயங்குகின்றது. இந்தப் பணியின் தனிச்சிறப்பு என்னவென்றால், உரைகள் நிகழ்த்தப்படும் கணத்திலேயே உரைபெயர்க்கப்பட்டு, சமகாலத்தில் உரைபெயர்ப்பு வழங்கப்படுவதாகும். பாராளுமன்ற உறுப்பினர்களினால் நிகழ்த்தப்படும் அனைத்து உரைகளும் ஏனைய இரு மொழிகளுக்கும் உரைபெயர்க்கப்படுகின்றன உதாரணமாக, ஓர் உறுப்பினர் ஆங்கிலத்தில் உரையாற்றினால், அவ்வுரை சமகாலத்திலேயே சிங்களத்திலும் தமிழிலும் உரைபெயர்க்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தங்களிற்கு விருப்பமான மொழியைத் தெரிவு செய்து அதைக் காதில் அணிந்து கொள்ளும் கருவி மூலம் செவிமடுக்கலாம். சபாமண்டபத்திலுள்ள ஒவ்வொரு ஆசனத்திற்கும் மொழித் தெரிவு ஆளியும் அதனைச் செவிமடுப்பதற்கான காதில் பொருத்தும் கருவியும் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, ஊடகத்துறையினர், சபாநாயகரின் பணியாளர்கள், பாராளுமன்றத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், சபாநாயகரின் கலரியிலுள்ள விருந்தினர்கள், கலரியிலுள்ள அரச அதிகாரிகள் போன்றோரும் இந்த உரைபெயர்ப்பு வசதியினைப் பயன்படுத்துகின்றனர். காதில் பொருத்தும் கருவிகள் பத்திரிகையாளர் கலரியிலும் ஏனைய இடங்களிலும் கிடைக்கப் பெறுகின்றன.

ஒவ்வொர் உறுப்பினருக்கும் அவரின் உரை செவிமடுக்கப்படுவதற்கும், அதேபோலவே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினால் என்ன கூறப்படுகின்றது என்பதைச் செவிமடுப்பதற்கும் உரிமை இருக்கின்ற காரணத்தினால், சமகால உரைபெயர்ப்பானது இச்சபையின் அத்தியாவசிய சேவையாகிவிட்டது. உரைகள் மற்றும் ஏனைய கூட்ட நடவடிக்கைகள் போன்றவை ஏனைய இரு மொழிகளுக்கும் உரைபெயர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது கௌரவ சபாநாயகரின் கடமை என, 12 ஆம் நிலையியற் கட்டளை தெளிவாகக் குறித்துரைக்கின்றது.

தேவைப்படும்பொழுது, பாராளுமன்றக் குழுக்களுக்கும் உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவ்வாறான குழுக் கூட்டங்கள் குழு அறையில் 1 அல்லது 2 இல் நடைபெறும்பொழுது அங்கே உரைபெயர்ப்பு வசதிகள் இருக்கின்றன. உரைகள் மற்றும் ஏனைய கூட்ட நடவடிக்கைகள் போன்றவை ஏனைய இரு மொழிகளுக்கும் உரைபெயர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது கௌரவ சபாநாயகரின் கடமை என, 12 ஆம் நிலையியற் கட்டளை தெளிவாகக் குறித்துரைக்கின்றது. தேவைப்படும்பொழுது, பாராளுமன்றக் குழுக்களுக்கும் உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவ்வாறான குழுக் கூட்டங்கள் குழு அறையில் 1 அல்லது 2 இல் நடைபெறும்பொழுது அங்கே உரைபெயர்ப்பு வசதிகள் இருக்கின்றன.



பாராளுமன்ற உரை பெயர்ப்பாளர்களின் அலுவலகம்

தொலைபேசி

0372237848

மின்னஞ்சல்

upali_b@parliament.lk





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks