பார்க்க

E   |   සි   |  

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

பாராளுமன்றத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கி அதனைக் கட்டுப்படுத்துவது இந்த அமைப்பின் மிக முக்கிய செயற்பாடாகும். இந்நிறுவனத்தின் பிரதான நிதிசார்ந்த செயற்பாடான பாராளுமன்றத்தின் அலுவல்களை எவ்வித தங்குதடையுமின்றி மேற்கொள்வதற்கு உதவி செய்வதற்கு மேலதிகமாக, கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட்டொகுதியினர், பாராளுமன்றத்திற்கான வழங்குனர்கள் மற்றும் சேவை ஏற்பாட்டாளர்கள் ஆகியோருக்கான நிதி சார்ந்த சேவைகளையும் பாராளுமன்ற நிதி, கணக்குகள் அலுவலகம் வழங்குகிறது.

நிதி, கணக்குகள் அலுவலகத்தின் ஏனைய செயற்பாடுகள் 

  • வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், செலவு தொடர்பான வருடாந்த மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடு.
  • வருடாந்த பகிர்வுக் கணக்குகளைத் தயாரித்தல்.
  • வருமான சேகரிப்பு மற்றும் நியதிச் சட்டமுறையான கழிவுகள்.
  • மாதாந்த கணக்குகளைப் பூர்த்திசெய்து திறைசேரிக்கு அறிக்கையிடல்.
  • மாதாந்த/வருடாந்த கணக்குகளைப் பூர்த்திசெய்து கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிக்கையிடல்.
  • மாதாந்தக் கணக்குகளை இணக்கம் செய்தல்.
  • உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கை நடைமுறைப்படுத்தல்.
  • கணனி மயப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்கக் கணக்குகள் முறையைப் பயன்படுத்தி பிரதான பேரேடு, ஏனைய கணக்குகள் மற்றும் நிதிசார் பதிவுகள் ஆகியவற்றைப் பேணல்.
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம், படிகள் ஆகியவற்றை வழங்கல்.
  • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது விதவைகளுக்குமான பாராளுமன்ற ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்கல்.
  • பணியாட்டொகுதியினருக்கான சம்பளம் மற்றும் படிகள் ஆகியவற்றை வழங்கல்.
  • பணியாட்டொகுதியினருக்கான கடன்களை வழங்கல்.
  • வழங்குனர்களின் விலைக்கூற்றுகள்/விலைச் சிட்டைகள், பயன்பாட்டு சேவைகள் விலைச்சிட்டைகள் ஆகியவற்றைத் தீர்த்தல்.
  • இலவச அஞ்சல் ஏற்பாடுகள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதுடன், அஞ்சல் முத்திரை இயந்திரத்தைப் பேணல்.

 



நிதி, கணக்குகள் அலுவலகம்

மின்னஞ்சல்

indrani_s@parliament.lk





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks