E   |   සි   |  

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

‘வழங்கல் பிரிவை’ ‘சேவைகள் பிரிவு’ எனச் சிறப்பாக அழைக்கலாம். தேசிய கொள்வனவு முகவரினால் வழங்கப்பட்ட கொள்வனவு வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப தேவையான பொருட்கள், சேவைகள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதுடன், இருப்புக் கட்டுப்பாடு, களஞ்சியப்படுத்தல் போன்ற ஏனைய செயற்பாடுகளுக்கும் இது பொறுப்பாக இருக்கிறது.

வழங்கல், சேவைகள் அலுவலகத்தின் ஏனைய செயற்பாடுகள்  

  • வழங்குனர்களை வருடாந்தம் பதிவு செய்தல்.
  • விலைமனுக்கோரல்கள் / கேட்புகள் தொடர்பில் விண்ணப்பங்களைக் கோரி அதனைப் பகுப்பாய்வு செய்தல்.
  • கேள்வி மனுக்கோரல் சபைகளை ஒருங்கிணைத்தல்.
  • வழங்குனர்களின் தெரிவு மற்றும் கொள்வனவுக் கட்டளைகளின் விநியோகம்.
  • சகல பண்டங்கள் மற்றும் சேவைகள், நிலையான சொத்துகள் மற்றும் உபகரணங்களின் கொள்வனவு.
  • ஒப்பந்தங்களைப் பேரம்பேசுதல்.
  • தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் மற்றும் கொள்வனவுக் குழுவின் சேவைகள் தொடர்பான விடயங்கள்.
  • இயந்திரங்கள், அலுவலக உபகரணங்கள், ஏனைய உபகரணங்கள் ஆகியவற்றை சீர்காப்புச் செய்தல்.
  • பாராளுமன்றத்தின் பிரதான பொருட்பதிவேட்டைப் பேணுதல் மற்றும் ஐந்து வருடங்களுக்கொருமுறை பொருட்களின் மீள்மதிப்பீடு.
  • பொருட்பதிவேடுகளைப் பாராமரித்தல் மற்றும் வருடாந்த பொருட்கணிப்பை நடாத்துதல்.
  • களஞ்சிய முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், பேரேடுகள் ஆகியவற்றின் பராமரிப்பு.
  • வழங்குனர் செயலாற்றுகைப் பதிவுகளைப் பேணுதல்.

 



மின்னஞ்சல்

nishantha_w@parliament.lk





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks